1

ஓம் சிவோஹம்

 
 
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….
அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
0

கடலில் மேயும் பசுக்கள்

டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை பற்றி தெரிந்துள்ள நாம், தமிழக கடற்பகுதியில் வாழும் மற்றுமொரு அரிய கடல்வாழ் பாலூட்டியான கடல் பசுக்களை பற்றி அதிகம் அறிந்துகொள்ளவில்லை என்றே சொல்லலாம். இதற்கு காரணம் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை போல இல்லாமல் கடல் பசுக்கள் மனிதர்களுக்கு சாதாரணமாக தென்படுவதில்லை. ஆங்கிலத்தில் டுகோங்என்று அழைக்கபடும். மீனவர்கள் இதை `ஆவுரியா’ என்று அழைக்கின்றார்கள். இவை வேகமாக நீந்தத் தெரியாத அப்பாவிகள்.


கடல் பசுக்களுக்கும்- டால்பின்களுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசம் முதுகு துடுப்பாகும். டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு முதுகு துடுப்புகள் இல்லை. இவை கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிபதில்லை. மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன. எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுபடுவதில்லை. குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில், சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும். உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது.முக்கியமான விஷயம் என்னவென்றால், கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.
நம் ஊரில் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள் கடல் அடியில் வளரும் புல்வகை களை மேய்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக, கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதில் கடல் பசுக்கம் கில்லாடிகள்.தாய்லாந்தில் நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக் களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது. அந்த நகரின் நினைவாக ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகத் தருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும், அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.


கடல் பசுக்கள் மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை. அவற்றின் பற்களில் உள்ள வளையங்களை கொண்டு வயதை கணிக்க முடியும். பத்து முதல் பதினைந்து வயதிற்கு பிறகே இவை குட்டி போடும் பருவத்தை அடைகின்றன. குட்டிகள் பொதுவாக 13 மாதங்கள் தாயின் வயிற்றில் வளர்கின்றன.


ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே போடும் கடல் பசுக்கள் அடுத்தடுத்த குட்டிகளை போட 3 முதல் 7 வருடம் வரை எடுத்து கொள்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கடல் பசுக்கம் வேகமாக தங்கள் இனத்தை பெருக்குவதில்லை. இந்த இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது.சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டை யாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்வதில்லை. எனவே உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு , கடல் பசுக்களை அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.கடல் பசுக்களின் இறைச்சி அசைவ பிரியர்களுக்கு பிடித்ததாக இருப்பதால், இந்தியா உட்பட சுமார் 31 நாடுகளில் இவை பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன. நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை. ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது அவை பிடிக்கபடு கின்றன.
0

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருஆலவாய் (மதுரை)தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
கோவில் அமைப்பு: எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.

மீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள். இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர். மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
சித்ரா பௌர்ணமி: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. இறைவனின் 5 சபைகளில் இத்தலம் வெள்ளி சபை. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இந்த சந்நிதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.
0

உட்கார்ந்த நவக்கிரகங்கள்

உட்கார்ந்த நவக்கிரகங்கள்

மதுரைக்கு அருகில் உள்ளது நத்தம் கைலாசநாதர் கோவில். இங்குள்ள நவக்கிரகங் கள் அனைத்தும் உட்கார்ந்த நிலையில் உள்ளன. இதுமாதிரி வேறுஎங்கும் இல்லை!


`ரிஷபாரூடர்!'

மதுரைக்கு அருகில் உள்ள விராதனூரில் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் `ரிஷபாரூடர்' வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த உருவத்தில் வேறு எங்கும் சிவன் காட்சியளிப்பதில்லை.

தகவல்கள் அனைவரின் நலனை விரும்பி தேடி பதித்தது.

0

வில்வத்தின் விளைவுவில்வத்தின் விளைவு

கைலாயத்தில் உள்ள சோலையில் ஒரு வில்வ மரத்தடியில் சிவன் பார்வதி தேவிக்கு சிவாகமங்களை உபதேசித்து கொண்டிருந்தார்.வில்வ மரத்திலிருந்த கருங்குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து சிவன் மீதும், பார்வதி மீதும் பாதம் முதல் தலை வரை போட்டது. குரங்கின் இந்த செயலால் கோபத்துடன் மேலே பார்த்தார் பார்வதி. உடனே குரங்கிற்கு அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் வரப்பெற்றது. உடனே குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் பாதத்தில் விழுந்து அடியேன் செய்த பிழையை பொறுத்தருள்க என வேண்டியது.
அதற்கு சிவன், "குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக" என அருள்புரிந்தார்
.

0

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
1

சூட்சுமம் திறந்த திருமந்திரம்!

ரு பெண்ணின் கருப்பையின் உள்ளே கருவானது எவ்வாறு உருவாகிறது என்பதை திருமந்திரப் பாடல்களின் வழியே கடந்த இதழில் கண்டோம். இனி அந்தக் கரு வளரும் நிலைகளில் என்னென்ன நிகழுகிறது என்று திருமூலர் கூறியுள்ள சில கருத்துக்களைக் காணலாம்.

ஒரு கரு உருவான உடனேயே அதில் உயிர் வந்துவிடுவதில்லை. பிராண சக்தியும், மறுபிறவி எடுக்கும் ஒரு ஆன்மாவும் அந்த கருப் பிண்டத்தின் உள்ளே நுழையும்போதுதான், அது செல்களின் குவியல் என்ற நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள ஒரு கருவாக உருவம் பெறுகிறது. அதுவரையில் நம் உடலிலுள்ள பல தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற முட்டையும் ஒரு தசை போன்றே கருதப்படும். பிராணன் எனும் மூச்சுக்காற்று (உயிர்க்காற்று) கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.

"பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்

தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்

மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்

கூவி, அவிழும் குறிகொண்ட போதே.'

-திருமந்திரம் பாடல் எண்-265.

தாயின் கருப்பையினுள் இருக்கும் சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட காலம் வரும்போது ஒரு மெல்லிய ஒலியோடு அந்த கருவின் உள்ளே புகும் என்பது இப்பாடலின் பொருளாகும். அவ்வாறு உள்ளே நுழைந்த காற்று அந்தக் கருவின் அனைத்துப் பகுதிகளிலும் (அனைத்து செல்களிலும் என வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும்.

இதற்கு உவமையாக திருமூலர் பூவின் நறுமணத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும் நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப் பகுதி முழுவதும் பரவி நிற்பதைப் போன்று, பிராணன் எனும் மூச்சுக்காற்றும் கருவின் உள்ளே நுழைந்து பரவி நிற்கும்! எவ்வளவு அற்புதமான ஒரு உவமை!

இந்த மூச்சுக்காற்று சரியான வேளையில் உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால் மட்டுமே, அந்தக் கரு முறையாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற முடியும். மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில் தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர இல்லாது போனாலோ கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருச்சிதைவும் ஏற்படலாம். இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகின்றார்.

"போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டுடன் நாலு புரவியும்

பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.'

-திருமந்திரம் பாடல் எண்-266.

இந்த நான்கு வரிகளில் பல அற்புதமான சூட்சும உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வரியாக சற்றே விளக்கமாகக் காணலாம்.

முதல் இரண்டு வரிகளில், மூச்சுக்காற்று உள்ளே நுழையும் முன்னர் அந்தக் கருவினுள்ளே என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிடுகிறார். கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய உடலினுள்,

-போகின்ற எட்டு (8)

-புகுகின்ற பத்தெட்டு (10+8=18)

-ஒன்பது வாய்தல் (வாயில்கள்)

ஆகியவை உள்ளன. இவை எவையெவை என்பதைக் காணலாம்.

போகின்ற எட்டு

1. சுவை

2. ஒளி

3. ஊறு

4. ஓசை

5. வாசம்

6. மனம்

7. புத்தி

8. அகங்காரம்

ஆகிய அருவமாக உள்ள எட்டையே போகின்ற எட்டு என்கிறார் திருமூலர்.

புகுகின்ற பத்தெட்டு (18)

10 வாயுக்கள் 8 விகாரங்கள் ஆகியவற்றையே புகுகின்ற பத்தெட்டு என்கிறார்.

பத்து வாயுக்கள்

1. பிராணன்

2. அபானன்

3. உதானன்

4. வியானன்

5. சமானன்

6. நாகன்

7. கூர்மன்

8. கிருகரன்

9. தேவதத்தன்

10. தனஞ்செயன்

எட்டு விகாரங்கள்

1. காமம்

2. குரோதம்

3. உலோபம்

4. மோகம்

5. மதம்

6. மாச்சரியம்

7. துன்பம்

ஒன்பது வாயில்கள்

1. வலது கண்

2. இடது கண்

3. வலது நாசி

4. இடது நாசி

5. வலது காது

6. இடது காது

7. வாய்

8. குதம்

9. பிறப்புறுப்பு

என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம் ஒன்பது. இதையே இப்பாடலில் "ஒன்பது வாய்தலும்' என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது வரியில் வருகின்ற "மூழ்கின்ற முத்தனும்' என்னும் சொற்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை. கருப்பையினுள்ளே கரு பனிநீர் எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ எப்ன்ண்க் என்ற திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும் இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற' என்ற வார்த்தையை திருமூலர் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

"முத்தன்' என்ற சொல்லுக்கும் ஆழமான அர்த்தம் உள்ளது. கடவுளுக்கும்கூட "முத்தன்' என்றொரு பெயருண்டு. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் முறையே பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் செய்வதாகக் குறிப்பிட்டாலும் மூவரும் ஒருவர் என்பதே உயர்நிலைத் தத்துவம். மூன்று குணங்களை- செயல்களை உடைய கடவுள் "முத்தன்'.

கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன், தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த ஆவி)' என கடவுள் மூன்று நிலைகளில் இருந்தாலும், ஒரே கடவுளே என்ற கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.

கடவுளுக்குச் சரி; மூன்று நிலைகளில் ஒன்றாக இருப்பதால் முத்தன் எனலாம். கருவிலிருக்கும் குழந்தைக்கு "முத்தன்' என்ற சொல்லை திருமூலர் ஏன் பயன்படுத்துகிறார்?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று உடல்கள் உள்ளன. நாம் கண்ணால் காணக்கூடிய பருவுடலை ஸ்தூல சரீரம் என்பார்கள். இது தவிர சூட்சும சரீரம், காரண சரீரம் என மேலும் இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இவை சக்தி நிலை உடல்கள் (Energy Bodies). சூட்சும சரீரம், ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்றும் இணைந்தே மனிதன் உருவாகிறான். கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பொருந்தும். மூன்று உடல்களால் உருவாவதால் கருவையும் திருமூலர் "முத்தன்' என்கிறார்.

இனி பாடலின் அடுத்த இரண்டு வரி களுக்கு வருவோம். முதல் இரண்டு வரிகளில் கருவில் என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிட்ட திருமூலர், அடுத்த இரு வரிகளில், "இவை அனைத்துமே ஒரு கருவில் இருந்தாலும், குண்டலினி சக்தி, பிராண சக்தி ஆகிய இரு சக்திகளை இறைவன் சரியான நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால் மட்டுமே, அந்தக் கரு வளர்ந்து ஒரு குழந்தையாக மாறும். அது நடைபெறாவிடில் கரு பாழாகிப் போகும்' என்கிறார்.

"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்' என்ற மூன்றாவது வரியை சற்றே அலசிப் பார்க்கலாம்.

குண்டலினி சக்தியையே "நாகம்' என குறிப்பிடுகிறார் திருமூலர். நமது உடலில் மூலாதாரச் சக்கரத்திற்கு அருகில் உறங்கிக் கிடக்கும் அற்புதமான சக்தியே குண்டலினி சக்தியாகும். சமஸ்கிருத மொழியில் "குண்டலா' என்றால் குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு கிடப்பது என்று பொருள்.

பாம்புகள் ஓய்வாக இருக்கும்போது சுருண்டே இருக்கும். எனவேதான் வடமொழி யில் பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும் உண்டு. தூக்கத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பைப் போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய நிலையில் மூலாதாரத்தின் அருகே சுருண்டு கிடக்கிறது. இந்திய மரபுப்படி சக்தி என்பதைப் பெண்பாலாகவும் தேவியாகவும் உருவகப்படுத்துவர். எனவேதான் சுருண்டு கிடக்கும் சக்திக்கு குண்டலினி, குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர்.

எதையும் நேரடியாகக் கூறாமல் சங்கேத வார்த்தைகளால் கூறுவது சித்தர் மரபு. எனவேதான் திருமூலர் குண்டலினியைக் குறிக்க "நாகம்' என்ற சங்கேத மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.

அடுத்து வரும் "எட்டுடன் நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம் கொண்டால் "12 குதிரைகள்' என்றே அர்த்தம் வரும். ஆனால் திருமூலர் இங்கே மூச்சுக்காற்றையே புரவி என்ற சங்கேத மொழியில் கூறுகிறார்.

சாதாரண மனிதர்களுக்கு மூச்சுக்காற்று கண்டத்திற்குக் கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும். யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு விரற்கடை பரந்து நிற்கும். இதையே எட்டுடன் நாலு புரவியும் என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.

கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற சொல் கடவுளைக் குறிக்கும் (சிவனை) சங்கேதச் சொல்லாகும். "பாகன்' என்பதற்கு செலுத்துபவன், கட்டுப்படுத்துபவன் என பல அர்த்தங்கள் உண்டு. குண்டலினி சக்தியையும் மூச்சுக்காற்றையும் கருவின் உள்ளே செலுத்து பவனாகையால் கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார். இவை இரண்டையும் பாகனாகிய கடவுள் அந்தக் கருவின் உள்ளே செலுத்தா மல் போனால் அந்தக் கரு வளர்ச்சியடையாது. வீணாகப் போய்விடும்.

ஐயன் வகுத்த திருக்குறளை சிறு அடிகளில் பெரும் உண்மைகளை விளக்கும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கொண்டாடுகிறோம். "கடுகைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று புகழ்வார்கள். திருவள்ளுவரின் திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல திருமூலரின் திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல் சான்றாக உள்ளதல்லவா? நான்கு வரிகளில் எத்தனை எத்தனை சூட்சுமங்கள்!