கடலில் மேயும் பசுக்கள்

டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை பற்றி தெரிந்துள்ள நாம், தமிழக கடற்பகுதியில் வாழும் மற்றுமொரு அரிய கடல்வாழ் பாலூட்டியான கடல் பசுக்களை பற்றி அதிகம் அறிந்துகொள்ளவில்லை என்றே சொல்லலாம். இதற்கு காரணம் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை போல இல்லாமல் கடல் பசுக்கள் மனிதர்களுக்கு சாதாரணமாக தென்படுவதில்லை. ஆங்கிலத்தில் டுகோங்என்று அழைக்கபடும். மீனவர்கள் இதை `ஆவுரியா’ என்று அழைக்கின்றார்கள். இவை வேகமாக நீந்தத் தெரியாத அப்பாவிகள்.


கடல் பசுக்களுக்கும்- டால்பின்களுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசம் முதுகு துடுப்பாகும். டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு முதுகு துடுப்புகள் இல்லை. இவை கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிபதில்லை. மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன. எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுபடுவதில்லை. குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில், சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும். உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது.



முக்கியமான விஷயம் என்னவென்றால், கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.
நம் ஊரில் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள் கடல் அடியில் வளரும் புல்வகை களை மேய்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக, கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதில் கடல் பசுக்கம் கில்லாடிகள்.



தாய்லாந்தில் நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக் களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது. அந்த நகரின் நினைவாக ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகத் தருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும், அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.


கடல் பசுக்கள் மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை. அவற்றின் பற்களில் உள்ள வளையங்களை கொண்டு வயதை கணிக்க முடியும். பத்து முதல் பதினைந்து வயதிற்கு பிறகே இவை குட்டி போடும் பருவத்தை அடைகின்றன. குட்டிகள் பொதுவாக 13 மாதங்கள் தாயின் வயிற்றில் வளர்கின்றன.


ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே போடும் கடல் பசுக்கள் அடுத்தடுத்த குட்டிகளை போட 3 முதல் 7 வருடம் வரை எடுத்து கொள்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கடல் பசுக்கம் வேகமாக தங்கள் இனத்தை பெருக்குவதில்லை. இந்த இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது.



சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டை யாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்வதில்லை. எனவே உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு , கடல் பசுக்களை அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.



கடல் பசுக்களின் இறைச்சி அசைவ பிரியர்களுக்கு பிடித்ததாக இருப்பதால், இந்தியா உட்பட சுமார் 31 நாடுகளில் இவை பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன. நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை. ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது அவை பிடிக்கபடு கின்றன.

0 comments:

Post a Comment